தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதே போல் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சுமார் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் வெளியிடப்பட்டது.
இதில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலை வயல் அரசு உயர்நிலைப் பள்ளியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பின் முதல் வருடம் கொரோனா காரணமாக அரசு ஆல்பாஸ் என அறிவித்தது. கடந்த 2021 - 2022 கல்வியாண்டில் 44 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்தனர்.
இந்த 2022 - 2023 கல்வியாண்டில் சுமார் 60 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்தனர் இதில் 36 மாணவிகள் 24 மாணவர்கள் அடங்கும். செந்தலையில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய பின்பு பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் உயர்கல்வி படிக்க ஆர்வர் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
செந்தலைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்பு 60 மாணவ மாணவிகள் படித்தனர்,
* பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மொத்தம் - 60
* தேர்வு எழுதியவர்கள் - 56
* தேர்வு எழுதாததவர்கள் - 4
* தேர்ச்சி பெற்றவர்கள் - 28
* தேர்ச்சி பெறாதவர்கள் - 28
மாணவிகள்:
தேர்வு எழுதிய மொத்த மாணவிகள் : 34
தேர்ச்சி பெற்ற மாணவிகள் : 24
தேர்ச்சி பெறாதவர்கள் : 8
தேர்வு எழுதாதவர்கள் : 2
மாணவர்கள்:
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் : 22
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் : 4
தேர்ச்சி பெறாதவர்கள் : 18
தேர்வு எழுதாதவர்கள் : 2
தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் அதிக அளவு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றினால் இன்னும் அதிக மாணவிகள் படிக்க கூடும் மற்றும் 100% தேர்ச்சி எடுக்க முடியும் மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க
துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செந்தலைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் முதல் ஐந்து இடங்களையும் பிடித்த மாணவிகளின் விபரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் இடம்:
S. ரகுமான் பீவி D/o சுலைமான்
மதிப்பெண் = 384
இரண்டாம் இடம் :
A. முபினா D/o அஜ்மீர் கான்
மதிப்பெண் = 334
மூன்றாம் இடம் :
Y. ஆதிலா பேகம் D/o யாக்கூப்
மதிப்பெண் = 329
நான்காம் இடம்:
R. ஆசிகா பானு D/o ரபீக் அகமது
மதிப்பெண் = 311
ஐந்தாம் இடம் :
M. நபிலா D/o முஜிபுர் ரகுமான்
மதிப்பெண் = 300
மார்க்க கல்வி மற்றும் உலக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மேல்கல்வி பயில ஆர்வமூட்ட வேண்டும், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் செந்தலைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் செந்தலைநியூஸ் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்....
நன்றி
குழந்தைகளை மேலும் மேலும் ஊக்கப்படுத்தவும்.,
10 வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவ மாணவிகள் துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் துணைத் தேர்வுக்கு தயாராகுங்கள் 10 வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் 27 வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். என பள்ளி கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது)
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.