பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதே போல் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை சுமார் 9.40 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மார்ச், ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் வெளியிடப்படப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மே 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.
Result எப்படி பார்க்கலாம்?
http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.” என்றும் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.