12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினா்.
தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் சரியாக விண்ணப்பித்து தேர்வுகளை எழுத வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் துணைத்தேர்வு குறித்த அறிவிப்பு முழுமையாக வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என சொல்லப்பட்ட நிலையில், அவர்களையும் தேர்வு எழுத முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சரியாக விண்ணப்பித்து தேர்வுகளை எழுத வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் துணைத்தேர்வு குறித்த அறிவிப்பு முழுமையாக வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என சொல்லப்பட்ட நிலையில், அவர்களையும் தேர்வு எழுத முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.