2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி - ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் மாற்றலாம்?


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, நாடு முழுவதம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாபது என் அறிவிக்கப்பட்டன. மத்திய பாஜக அரசு எடுத்த இந்த நடவடிக்கையை மக்களால் எப்போதும் மறக்க முடியாது, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். அந்த பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டுகளும், பின்னர் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் மற்றும்/அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் மாற்றலாம்:

ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்