பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை மே.31-ல் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாணவர்கள் சேர்க்கை
2023-24 கல்வியாண்டிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும் மே 31ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திறனாளிகள் தேசிய மாணவர் படை விளையாட்டு பிரிவு மாணவ மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு அனைத்து பாடத் பிரிவினருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

ஜூன் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை பிஎஸ்சி கணிதம், கணினி, அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் மூன்றாம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாட பிரிவுகளுக்கும், ஜூன் ஐந்தாம் தேதி திங்கள்கிழமை பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில், கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது

* 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்,
* சாதி சான்றிதழ்,
* சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ்,
* ஆதார் அட்டை அசல்,
* 5 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் மூன்று நகல்கள் எடுத்து வர வேண்டும்.

சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அனைவரும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் அனைத்து பக்கங்களையும் இரண்டு நகல் எடுத்து வர வேண்டும்.

கலந்தாய்வில் ஒரு பாடத்திட்டத்தில் சேர்க்கை பெற்ற பின்பு வேறு பாடப்பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது. கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகு சேர்க்கை பூர்த்தியாகும். இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று, இடையில் மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள், மீண்டும் இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற இயலாது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தி: முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்