தஞ்சை மாவட்டம் அதிரையில் கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் & ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வு இன்று 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் அஸ்வந்த்கிருத்திக்,
ஹரிகிருஷ்ணா, நலன்ராஜன், நிரஞ்சன், பிரனேஷ், ராம்சாந்த், சங்கரயோகபாலன் ஆகிய 7 மாணவர்கள் பங்குபெற்ற இச் சாதனை நிகழ்வு இன்று அதிராம்பட்டினத்திலிருந்து சேதுபாபாவாசத்திரம் வரை சாலையில் 17 கிலோ மீட்டர் தூரம் ரோலிங் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்தனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை போலீஸ் டி. எஸ். பி. பிருதிவிராஜ்சௌகான் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஸ்கேட்டிங் செய்த மாணவர்கள் 7 பேரையும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கைதட்டி உற்சாகமாக ஆரவாரப்படுத்தினர்.
இவர்களது சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனத்தின் சிஓ அரவிந்த்லெட்சுமிநாராயணன், வினோத் ஆகிய இரண்டு பேர் மாணவர்களின் முன்புறம் ஒருவர் இருசக்கர வாகனத்திலும், மாணவர்களின் பின்புறம் காரில் ஒருவரும் இரண்டு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்தனர். ஸ்கேட்டிங் செய்த 7 மாணவர்களும் 54 நிமிடங்களில் 15 கிலோ மீட்டர் சென்றவர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆரவாரத்தால் 6 நிமிடத்தில் இரண்டு கிலோ மீட்டர் கடந்து 17 கிலோ மீட்டர் என்ற இலக்கை சேதுபாவாசத்திரம்
கடைத்தெருவில் நிறைவு செய்தனர்.
ஸ்கேட்டிங் உலக சாதனை படைத்த மாணவர்கள் ஸ்கேட்டிங் தொடங்கும் முன்பு கடல் வளம் காப்போம் என்று முழக்கங்களை எழுப்பி ஸ்கேட்டிங்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முடிவில் 1 மணி நேரத்தில் 17 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து 7 மாணவர்கள் உலக சாதனை படைத்ததாக நோபல் உலக சாதனை நிறுவனத்தின் சிஓ அறிவித்து அவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்த 7 மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.