சேதுபாவாசத்திரம் அருகே புதுத்தெரு பகுதியில் கடலில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அண்ணா நகர் புதுத்தெரு கிராமத்தை சேர்ந்த மீனவர் குமார்(வயது47) நேற்று அதிகாலை 2 மணிக்கு அண்ணா நகர் புதுத்தெரு பகுதியிலிருந்து சுமார் 3 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குமார் மயங்கி கடலுக்குள் தவறி விழுந்தார். இதைக்கண்ட சக மீனவர்கள் கடலில் மிதந்த குமாரை மீட்டுகடற்கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.