சென்னையில் உள்ள 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி-க்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின்'ப்ரீசென்ஸ்' இணைய இதழும் சேர்ந்து சிறந்த எம்.பி-களுக்கான 'சன்சத் ரத்னா' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்பிய விவாதங்கள், கலந்து கொண்ட விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், எழுப்பிய கேள்விகள், வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்க்கண்ட சிறந்த செயல்திறன் கொண்ட எம்.பி-களை 'ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன்' நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது. அந்த வகையில் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பி எம். முகமது அப்துல்லா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
மக்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-க்கள் விவரம் வருமாறு;
1. சுப்ரியா சுலே - தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா
2. ஸ்ரீரங் அப்பா பார்னே - சிவசேனா - மகாராஷ்டிரா
3. பித்யுத் பரன் மஹதோ - பா.ஜ.க - ஜார்கண்ட்
மாநிலங்களவையின் முதல் 3 சிறந்த எம்.பி-க்கள் விவரம்;
1. டாக்டர் யாஜ்னிக் அமீ ஹர்ஷத்ரே - காங்கிரஸ் - குஜராத்
2. எம். முகமது அப்துல்லா - திமுக - தமிழ்நாடு
3. டாக்டர் ஃபௌசியா தஹ்சீன் அகமது கான் - தேசியவாத காங்கிரஸ் - மகாராஷ்டிரா
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.