உடையநாட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள்

பேராவூரணி அருகே உடையநாட்டில், ராஜராஜன் கல்வி நிறுவனம் மற்றும் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான தடைகளைப்  போட்டிகள்  வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.  வருகிற மே-20 சனிக்கிழமை, எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 50 மீட்டர், 75 மீட்டர் ஓட்ட போட்டிகளும், நீளம் தாண்டுதல், பந்து எறிதல் முதலிய போட்டிகளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற இருக்கிறது.

அதுபோலவே, வருகிற மே-21 ஞாயிற்றுக்கிழமை_ 12 வயது முதல் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகளாக, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர், ஆயிரம் மீட்டர், 2000 மீட்டர்  முதலியனவும், நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் முதலிய போட்டிகளும் நடைபெற இருக்கிறது.  போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் உணவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி  பெரும் மாணவ  மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்