பேராவூரணி பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு காவடி பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு ஜமாலியா மஸ்ஜித் இஸ்லாமிய நண்பர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஶ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு ஜமாலியா மஸ்ஜித் இஸ்லாமிய நண்பர்கள் சார்பில் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மேலும் நாளைய தினம் பேராவூரணி பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு காவடி பால்குடம் எடுத்துச் செல்லும் பக்தர்களுக்கு சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட நாளை காலை 9 மணிக்கு பள்ளிவாசல் வாசலில் தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானம் வழங்க ஜமாலியா மஸ்ஜித் இஸ்லாமிய நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருவிழாவில் ஜமாலியா மஸ்ஜித் இஸ்லாமிய நண்பர்கள் செய்த பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. சித்திரைத் திருவிழா என்பது மதங்கள் கடந்த ஒற்றுமையை ஓங்கிச் சொல்லும் விழாவாக கொண்டாடப்படுவதற்கு இது சாட்சியாக அமைந்துள்ளதாக விழாவில் பங்கேற்ற சிலர் தெரிவித்தனர்.
வட இந்தியாவில் இருந்து தென் மாநிலமான கர்நாடகா வரை மதவாத வன்முறைகள் தலைவிரித்து ஆட தொடங்கிவிட்டன. இந்த நிலையிலும், தமிழ்நாடு தனித்து நின்று மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மதநல்லிணக்கம் என்பது மற்ற பகுதிகளைவிட அதிகம் எனலாம். இங்குள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைத்துக் கொள்ளும் அளவும் நூற்றாண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறார்கள்.
கோயில் திருவிழாக்களின் சமயத்தில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மசூதி, ஜமாத் நிகழ்வுகளில் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்து முக்கியத்துவம் கொடுப்பதும் வாடிக்கை. அவரவருக்கு விருப்பமான மதங்களை இந்துக்களும், முஸ்லிம்களும் பின்பற்றினாலும், அதை கொண்டு தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில்தான் இவர்களின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.