தமிழக முழுவதும் இன்று மே 1ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று மே 1ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் ஊராட்சியில் இன்று 11 மணியளவில் செந்தலை தர்ஹாவில் கிராமசபை கூட்டம் தொடங்கியது.. ஊராட்சி மன்றத்தலைவர் ரகுமத்துல்லா தலைமையில் கூட்டம், நடைபெற்றது. இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை 2-வது வார்டு உறுப்பினர் F. மீராசா மட்டுமே வார்டு உறுப்பினர்களில் கலந்து கொண்டார். ஊர் நல அலுவலர், ஊராட்சி செயலாளர் பாலு, சுகாதாரதுறை பணியாளர்கள் சத்துணவு அமைபாளர்கள், ஊர் பொதுமக்கள் சிலர். ஊர் பெரியவர்கள் சிலர் என மிக குறைந்த அளவு மக்களே இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.....
இனி வரும் காலங்களில் ஊர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறது செந்தலை நியூஸ்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.