ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும்போது 30 விநாடிகள் வரை விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது
நவீன தொழில்நுட்பக் காலத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்த ஸ்டார்ட் டிவிகளில் பெரும்பாலும் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் மிக குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப்பில் தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் யூடியூப்பில் மக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயனர்களான இருந்து வருகின்றனர்.
யூடியூப் தளம் தற்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. இதனால் அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வரை யூடியூப்பில் வீடியோ பார்க்கும்போது உள்ளடக்கத்தை பொறுத்து ஸ்கிப் பட்டன் மூலம் அடுத்தடுத்து 15 விநாடி விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த நடைமுறையை கூகுள் நிறுத்தி, ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 விநாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என்றும் 30 விநாடிகள் NON Stop விளம்பரங்களை காண்பிக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விளம்பர கொள்ளை விரைவு தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தியாவில் விரையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும்போது 30 விநாடிகள் வரை விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்ற அறிவிப்பு பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.