11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? - விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை...!


11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. முதலில் 10, 12ம் வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடந்தன. அதன்பிறகு 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது. அதாவது 11ம் வகுப்பு தேர்வுக்கு ஆசிரியர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குறிப்பாக தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் 12ம் வகுப்புக்கான பாடத்தை முன்கூட்டியே படிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதன் காரணமாக தான் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது.

தற்போது கடந்த 5 ஆண்டுகளாக 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்