14 வயதுக்கு உட்பட்டோருக்கான தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

14 வயதுக்கு உட்பட்டோருக்கான தஞ்சை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு வருகிற 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதில் 1-9-2009-க்கு பிறகு பிறந்தவர்கள் உரிய பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன், வெள்ளை சீருடையுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்