தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா வெண்டையாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களில் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடக்கிறது.
முகாமில் பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்திற்கும் பரிசோதனை நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர். மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.