தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில், நீண்ட காலமாக ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த ஆதார் சேவை மையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆதார் அட்டை புதிதாக எடுக்கவும், திருத்தம் செய்யவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தநிலையில் பேராவூரணி அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் அஞ்சல் அலுவலகத்தில் குவிந்ததாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதாலும், பலரும் ஏமாற்றமடைந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், அஞ்சல் அலுவலகத்தின் மாடியில் ஆதார் சேவை மையம் செயல்பட்டதால், முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் 7 மாதங்களுக்கு, பிறகு ஆதார் சேவை மையம் மீண்டும் தொடங்கி உள்ளது. மேலும், இந்த ஆதார் சேவை மையம், தற்போது தரைத்தளத்தில் தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் இடது புறத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மாடிக்கு செல்லும் சிரமம் தவிர்க்கப்பட்டு, தரைத்தளத்திலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புதிய ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளவும் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வந்து சேவையை பெற்றுக் கொள்ளலாம்" என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதைப்போல தாசில்தார் அலுவலக மேல் மாடியில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் ஆகியவை, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோயாளிகள் கோரிக்கையை ஏற்று, தரைத்தளத்திலேயே இயங்க தாசில்தார் சுகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.