வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கடலில் இறங்கி நண்டு பிடிக்கும் போது மயங்கி கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54). இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கிய நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.