பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலி (FM) ஒலிபரப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலியின் ஒலிபரப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகனுக்கு சமூக ஆர்வலர் விவேகானந்தம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வ. விவேகானந்தம் அனுப்பிய மனுவில்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட பகுதிகளில் விவசாயிகள், மீனவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, பண்பலை வானொலிகளின் ஒலிபரப்பு நிலையத்தை பட்டுக்கோட்டையில் அமைத்து தர வேண்டுகிறோம்.

திருச்சி, கொடைக்கானல், காரைக்கால் வானொலி நிலையங்களின் பண்பலை ஒலிபரப்பு பல பகுதிகளில் தெளிவாகக் கேட்பதில்லை. எனவே பட்டுக்கோட்டை பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் முத்துப்பேட்டை போன்ற கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பயன் பெறும் வகையில் பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலி
ஒலிபரப்பு நிலையத்தை அமைத்துத் தர வேண்டும். எனக் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்