அதிராம்பட்டினம் TNTJ சார்பில் ரத்த தானம் முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளைகள் 1&2 சார்பாக ஆயிஷா அரங்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையேற்று நடத்தினார், இதில் மாவட்டதலைவர் கே. ராஜிக்முகமது, மாவட்ட துணைசெயலாளர் மு. அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலும் அதிராம்பட்டினம் கிளை 1&2 நிர்வாகிகள் பஷல் மைதீன், நசுருதீன், சாகுல்அமீது, அபூபக்கர், தௌபீக், சலீம், ஜலால், அகமது ஆகியோர் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ரத்ததான முகாமில் 40 யூனிட்டுகள் ரத்தம் தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனை இரத்த வங்கிக்கு தானமாக கொடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்