சம்பைப்பட்டிணத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


சம்பைப்பட்டிணத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சம்பைப்பட்டிணத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாவட்ட தலைவர் H.சாதிக் பாட்ஷா தலைமையில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பைப்பட்டிணம் கடைவீதியில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் இது தான் இஸ்லாம் 
என்ற தலைப்பில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்தினார். சொர்க்கத்தின் நன்மைகள் என்ற தலைப்பில் NTF மாநில செயலாளர்  M.யாசிர் அரஃபாத் இம்தாதி உரையாற்றினார், தொடர்ந்து 
தியாக பெண்மணிகள் என்ற தலைப்பில் NTF மாநில செயலாளர் அதிரை பாரூக், ஆகியோர் உரையாற்றினார். பொதுக் கூட்டத்தில் மழை வந்த போதும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்றபடி பொதுக்கூட்ட உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பொதுக்கூட்ட முடிவில் NTF கிளை தலைவர் H.காதர் பாட்ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்