சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
பாலாவை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார். இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், kpy பாலா தனது சொந்த பணத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நமது இல்லம் பெரியவர்களுக்காக ஆம்புலன்ஸ் வண்டியை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”என்னுடய 5 வருட கனவு நினைவாகிடுச்சு. எப்படியாவது வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நினைச்சேன். என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேத்து எப்படியோ என் சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன். இது மட்டும் இல்லாம அறந்தாங்கினய சுத்தி இருக்குற கிராமத்துல யாருக்கு எமர்ஜென்சி என்றாலும் இந்த ஆம்புலன்ஸ இலவசமா யூஸ் பண்ணிக்கலாம். அதுக்கு ஆகுற பெட்ரோல் காச நான் குடுத்துடுறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. என் பிறந்தநாளுக்கு விஷ் பண்ண எல்லாருக்கும் நன்றி. நான் யாருடைய வாழ்த்துக்காவது பதில் பண்ணலனா மிக்க சாரி. ரொம்ப மிக்க நன்றி. உங்க எல்லோருடைய ஆதரவுனாலதான் என்னுடைய கனவ சாதிக்க முடிஞ்சது. லவ் யூ”. என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறைந்த ஊதியம் பெற்றாலும் உதவ வேண்டும் என்ற மனசு இருக்கே அதுதான் சார் கடவுள் என பாலாவை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CuJw6FgPQbS/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.