பேராவூரணி மற்றும் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இதனால் மின்விசிறி இன்றி தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வழக்கம் போல் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதை தொடர்ந்து பேராவூரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு 7 மணி வரை 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்கும், தென்னை சாகுபடிக்கும் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக உள்ளது, என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 6. 30 மணி வரை நீடித்தது. பேராவூரணி சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.