ஜனவரி. 30 தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு 
ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு ஜன. 26 முதல் 30 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் 30. 01. 2024 (செவ்வாய் கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.   


மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி (10. 02. 2024) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்