அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று மீனவர் ஒருவர் வலையில் அரிய வகை மீனான பறக்கும் மீன் சிக்கியது. அந்த மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இதை மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். இதைப்பற்றி மீனவர்கள் கூறுகையில், 'பறக்கும் வகை மீன் நமது பகுதி கடலில் கிடைப்பது அரிது. இது பெரும்பாலும் அரபிக்கடல் பகுதியில்தான் அதிகம் கிடைக்கும். இறக்கை இருப்பதால் ஐந்து அடி தூரம் வரை பறக்க கூடியது. அதனால் பறக்கும் மீன் என்று அழைப்பார்கள். தற்போது விற்பனைக்கு வந்துள்ள பறக்கும் மீன் ரூ. 250-க்கு விற்பனையானது' என்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.