மனிதநேயத்தை வளர்த்திடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு டெமோ அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடையில், மாசற்ற மனிதநேயத்தை வளர்த்திடுவோம் வாருங்கள் என்ற தலைப்பில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் ஒன்றிணைந்து பல்வேறு விதமான விழிப்புணர்வு டெமோக்களை உருவாக்கி, மனிதநேயம் மலர அறிவியல் கண்காட்சிகளை நடத்தினர். 

இதில் சாலை விபத்து நேரங்களில், முதலுதவி செய்வதை தவிர்த்து விட்டு, செல்போனில் படம் பிடிக்கும் வருத்தமான சூழ்நிலையை விளக்கும் விதங்கள், சென்னை மற்றும் நெல்லை வெள்ள பாதிப்பு சமயங்களில் சமூக ஆர்வலர்களின் பணியினை போற்றும் விதங்கள் உள்பட பெண் சிசுக்கொலை, கல்வி, அரசியல், விவசாயம், போதைபொருள், மாசுபடுதல், சமத்துவம் மணிப்பூர் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அடங்கிய டெமோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இஸ்லாமிய பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கி வடிவமைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு கண்காட்சியை காண்பதற்கு அந்தப் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பெண்கள் வருகை தந்து விழிப்புணர்வு கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்