பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கருதாமல் மூன்றாவது மொழியை எடுத்து படித்து வருகின்றனர். பொதுத் தேர்வில் மூன்றாவதாக எடுக்கும் விருப்பப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினால் போதும். ஆனால், விருப்ப பாடமாக மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். விருப்ப 3 பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.