தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகம் அமைத்து சுமார் 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்துறைமுகம் திறந்த கடல் பகுதியில் அமைக்கப்பட்டதால் கடந்த கஜா புயலின் போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைந்தன. இயற்கை சீற்றத்தால் படகுகள் அடிக்கடி சேதமடைந்து வருகின்றது. இதை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைத்துதர வேண்டும்.
கடற்கரைப் பகுதிகளில்
ஆற்று முகத்துவாரம் மணல் அடைப்புகளால் மூடப்பட்டுள்ளது. எனவே முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி தர வேண்டும். குறிப்பாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால், கட்டையங்காடு ஆறு, மனோரா ஆறு, சம்பைபட்டினம் ஆறு, செந்தலைப்பட்டினம் ஆறு, மந்திரிபட்டினம் ஆறு, கணேசபுரம் ஆறு, ஆகிய ஆறுகளை தூர்வாரி தர வேண்டும்.
கடல் மீனவர்களுக்கு வழங்குவது போல் மழைக் கால நிவாரண நிதியாக ஆறு குளம் குட்டைகளில் மீன் பிடித்து வரும் உள்நாட்டு மீனவர்களுக்கும் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்பிடி சந்தையில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர்கள் வரை வந்து செல்லும் இடமாக உள்ளதாலும் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாலும் துறைமுக பகுதியில் ஒரு நவீன வசதியுடன் உயர் சிகிச்சை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். என மனுவில் கூறிபிட்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.