மிகப்பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களைக் காட்டிலும் கேரளா முன்னிலை வகிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 கோடி மக்கள் தொகை கொண்ட கேரள மாநிலத்தில் சுமார் 1 கோடி (99 லட்சம்) பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இந்தியாவின் அதிக மக்கள் தொகை (சுமார் 24 கோடி பேர்) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 88 லட்சம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
13 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 98 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பெற்ற 2-ம் இடத்தை கூட உத்தரபிரதேசத்தால் எட்ட முடியவில்லை. வெளிநாடுகளில் குடியேறியவர்களுக்கு பெயர் பெற்ற மாநிலமான பஞ்சாப்பில் 70.14 லட்சம் பேர் பாஸ்போர்ட் கொண்டுள்ளனர்.
கேரளாவில் வழங்கப்பட்ட 99 லட்சம் பாஸ்போர்ட்டுகளில் 42 லட்சம் பேர் பெண்கள் ஆவர். இந்த பிரிவிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது. 40.8 லட்சம் பெண் பாஸ்போர்ட்டுகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஆண்கள். அம்மாநிலத்தில் 17.3 லட்சம் பெண்கள் மட்டுமே பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த இந்திய அளவில், 35 சதவீதம் பெண்கள பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் மொத்தம் 8.8 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3.1 கோடி பெண்கள் பாஸ்போர்ட் கொண்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் தொடங்கி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கேரள மாநிலத்தவர்கள் வசிக்கின்றனர். சமீப ஆண்டுகளில், மால்டோவா போன்ற அறியப்படாத நாடுகளுக்கு கூட கேரளத்தினர் செல்லத் தொடங்கியுள்ளனர்.
Source: kamadenu.hindutamil.in
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.