குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தினால் சிறை தண்டனை: தஞ்சை மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய துறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும். 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில் தொடர்புடைய பணிகளான செங்கல்சூளை, கல் குவாரி, பட்டாசு தொழில் மற்றும் அனைத்து வகையான இதர பணிகளில்
பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறும் பட்சத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறையாமல், ரூ. 50 ஆயிரத்திற்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு குறையாமல் அல்லது 2 ஆண்டுகளுக்கு மேற்படாமல் சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

பாபநாசம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடை நிறுவன உரிமையாளர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையானது தஞ்சை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் மறு வாழ்வு நலச்சங்க வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்கு தொகையான தலா ரூ. 15 ஆயிரம் வரப் பெற்றவுடன் அபராத தொகை தலா ரூ. 20 ஆயிரத்தையும் சேர்த்து ரூ. 35 ஆயிரம் சிறுவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, சிறுவர்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்