இதனை எடுத்து அவரது சொந்த ஊரான அதன் ஊரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, அவரை வாழ்த்தும் விழா நடத்தினர். விழாவிற்கு, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மின்சார வாரிய பணியாளர் லெனின் லூதர் தலைமை வகித்தார். விழாவிற்கு, லெனின் மெமோரியல் நண்பர்கள் கிளப் மற்றும் கேஏஎல் கேபிள் விஷன் நண்பர்கள் பிரடரிக், லிபின்சன் மற்றும் நவீன் ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு, கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் சமூக ஆர்வலர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், தலைமை காவலர் எசேக்கியாவுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், கிராம பொறுப்பாளர்கள் அந்தோணி செல்வராஜ் மற்றும் அன்பானந்தம் ரயில்வே ஓய்வு, ஆதனூர் கவுன்சிலர் காரல்மார்க்ஸ், பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தாமரைச்செல்வன், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ், ஜான் போஸ்கோ, அருள்ராஜ் ஐஓபி, ரூபன், கோவை ஞானராஜ், லெனின் மெமோரியல் கிளப் நண்பர்கள் எட்வின், அமல்ராஜ், பாலசிங்கம், ஆமோஸ், அருள் யோசுவா, மணிகண்டன் மற்றும் சுனில் பிரதர்ஸ், வனத்துறை அந்தோணிசாமி, ஏவிஎம் பிரிண்டர்ஸ் அலெக்ஸாண்டர், ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக காலை தொடங்கி மாலை வரை சிறுவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாலையில் பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றது. இறுதியாக தலைமை காவலர் எஸ்.எசேக்கியா ஏற்புரை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதனூர் லெனின் மெமோரியல் கிளப் நண்பர்கள், கேஏஎல் கேபிள் விஷன் நண்பர்கள் மற்றும் சுனில் பிரதர்ஸ் செய்திருந்தனர். இறுதியாக பால் ஜோசப் நன்றி கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.