பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஐந்தாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. திருமலைச்சாமி தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் பேசியதாவது, வாழ்வில் எவ்வளவோ பட்டம், பதவி பெற்று வாழ்வில் உச்சத்தில் உள்ளோம். ஆனால், இன்றைக்கு நாம் கிராமங்களை மறந்து விட்டோம். உங்கள் ஆணிவேர் கிராமங்கள் தான் என்பதை உணர வேண்டும். நமது வளர்ச்சிக்கு வித்திட்டது, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, ஒழுக்கத்தை கற்றுத் தந்தது கிராமங்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் விடாமுயற்சி, உழைப்பு, பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை ஒருபோதும் விட்டு விடக்கூடாது" என்றார்.

பட்டமளிப்பு விழாவில் இளங்கலையில் 305 மாணவர்கள், 738 மாணவிகள் என 1, 043 பேருக்கும், முதுகலையில் 11 மாணவர்கள், 47 மாணவிகள் என 58 பேருக்கும் ஆக மொத்தம் 1, 101 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்