சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமை வகித்து பேசுகையில், இந்திய கடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது மற்றும் கடற்கரை சூழலியலை காப்பது மற்றும் வேட்டையாடுபவர்களை பிடிப்பது மற்றும் மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் கடல் கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது என்றாலும், இது கடற்படை மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது என்றார்.
மேலும் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கடற்கரை காவல் நிலையங்களின் செயல்பாடுகள், உபகரணங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமை காவலர் கோபால், காவலர்கள், ஆசிரியர்கள், புதுப்பட்டினம் அபு மெட்ரிக் பள்ளி, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.