கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜி-மெயில் தகவல்களை அனுப்ப,பெற, சேமிக்க மற்றும் பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் அலுவலங்களுக்கு பேருதவியாக இருப்பது ஜி மெயில் இந்நிலையில், 'Google is sunsetting Gmail' என்ற தலைப்பில் கூகுள் ஜி மெயிலை மூடப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் எந்த தகவல்களையும் அனுப்ப,பெற, சேமிக்க முடியாது எனவும் ஜி- மெயிலின் எந்த சேவைகளையும் பெற இயலாது எனவும் தகவல்கள் பரவியது.
அதோடு, ஜி மெயிலின் சேவைகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்த தகவலால் ஜி- மெயில் பயனர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த பதிவு 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில், இதற்கு கூகுள் விளக்கம் அளித்துள்ளது. முன்பு இருந்த அடிப்படை அமைப்பை தற்போது மேம்படுத்தியுள்ளதாகவும், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. ஜி மெயில் சேவை தொடரும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.