சம்பைபட்டிணத்தில் ஐந்து மாவட்டத்திற்கான மாபெரும் இஜ்திமா ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சை, புதுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டிணம் , காரைக்கால், ஆகிய
ஐந்து மாவட்டங்களுக்கான தப்லீக் ஜமாஅத் சார்பில் மாபெரும் இஜ்திமா இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சம்பைபட்டிணத்தில் பிப்: 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்கான பணிகள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.

இதற்காக சம்பைபட்டிணத்தில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் தொழுகும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. கரூரை சேர்ந்த பந்தலமைக்கும் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது, வாகனங்கள் நிறுத்துவதற்கும் தனி பரப்பளவில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ முகாம் வசதி, ஒழுசெய்ய வசதி, குடிநீர் வசதி, உணவு, கழிவறை, ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. 

இஜ்திமா வரும் 7 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு துஆவுடன் இஜ்திமா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு நாட்கள் இஜ்திமாவில் டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மற்றும் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்த உள்ளார்கள் பின்பு 8 ஆம் தேதி இஷா தொழுகையுடன் இஜிதிமா நிறைவுபெறுகின்றது.

இஜிதிமா நடைபெறும் இடம் Google Map - லிங் கொடுக்கப்பட்டுள்ளது.



தகவல் மற்றும் புகைப்படங்கள் :
மௌலானா ஹாபிழ்
M. முஹம்மது முஸ்தபா அன்வாரி
இமாம் ஜூம்ஆ பள்ளிவாசல்
உடையநாடு
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்