இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நாட்டில் 5 ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் தேதி நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை என்பது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேதிகள் தான் புதுச்சேரிக்கும் பொருந்தும்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், வயதான வாக்காளர்கள் விவரங்களை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
அதன்படி, தற்போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96.88 கோடி. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 96,88,21,926
ஆண்கள் - 49,72,31,994
பெண்கள் - 47,15,41,888
மூன்றாம் பாலினத்தவர்கள் - 48,044
மாற்றுத்திறனாளிகள் - 88,35,449
18 - 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் - 1,84,81,610
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் - 82 லட்சம் பேர்
100 வயதுக்கு மேற்பட்டோர் - 2 லட்சத்து 18 ஆயிரம் பேர்
இந்தியாவில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் - 82 லட்சம் பேர், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மேலும், . 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.