புதுக்கோட்டை உட்பட தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள்.. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல்,  திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவற்றில் பெரிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை தமிழக முதலமைச்சரின் பரிசீலனைக்குப் பிறகு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை புதிதாக மாநகராட்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்