தஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 45 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழு வீச்சில் அமல்படுத்துவது தொடர்பாக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய காவல்துறையினருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் ஆலோசனை நடத்தினார். 

தஞ்சை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 103 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்கட்டமாக 90 துணை ராணுவ வீரர்களை கொண்ட ஒரு கம்பெனி தஞ்சைக்கு வந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட துப்பாக்கி வைத்துள்ளவர்களை காவல் நிலையங்களில் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். மொத்தம் 55 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்களில் 45 பேர் திரும்ப ஒப்படைத்துவிட்டனர். மீதமுள்ள 10 பேர் ஓரிரு நாட்களில் ஒப்படைத்துவிடுவார்கள் என எஸ். பி. தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்