புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு. இதன்படி, கைத்துப்பாக்கி, நீண்ட துப்பாக்கி போன்ற துப்பாக்கி உரிமம் வைத்துள்ளோருக்கு போலீஸாா் முறைப்படி அறிவிப்புகளைக் கொடுத்துள்ளனா். 

மாவட்டம் முழுவதும் மொத்தம் 518 போ் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனா். திங்கள்கிழமை மாலை நிலவரப்படி இவா்களில் 516 போ் தங்களின் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து, உரிய ரசீது பெற்றுச் சென்றனா். மீதமுள்ள 2 பேரும் வெளியூரில் இருப்பதால் ஓரிரு நாளில் நேரில் வந்து துப்பாக்கிகளை ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனா் என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்