தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி... 6 முறை MP -யாக இருந்தவர் யார் ? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

கரைபுரளும் காவிரி ஆற்றின் துணையுடன் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை போர்த்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் தஞ்சாவூர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டி எழுப்பப்பட்ட பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டு, வீணை உள்ளிட்டவை இந்த மாவட்டத்தின் சிறப்புகள். விவசாயமும், மீன்பிடி தொழிலும் பிரதானமாக கொண்ட தஞ்சாவூரில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என ஆண்டவர்கள் அதிகம்.

தமிழ்நாட்டின் 30வது நாடாளுமன்ற தொகுதியாக உள்ள தஞ்சையில், மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1952 முதல் 2019ஆம் ஆண்டு வரை 19 முறை இந்த தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிக முறை வென்ற கட்சி காங்கிரஸ் தான். ஆனால் காங்கிரஸ் 9 முறை வெற்றிபெற்றிருந்தாலும், இந்த தொகுதியில் அதிக முறை, அதாவது 6 முறை எம்.பி.யாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

கடந்த தேர்தலில் திமுக, தமாகா, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 55 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்றார் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். அவர் 5 லட்சத்து 88 ஆயிரத்து 978 வாக்குகள் பெற்ற நிலையில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 849 வாக்குகளை மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவினார் தமாகா வேட்பாளர் நடராஜன்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்