மல்லிப்பட்டினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

மல்லிப்பட்டினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தஞ்சை தெற்கு மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாகீர் தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் திமுக கட்சி கொடியினை மல்லிப்பட்டினம் கிளை அவை தலைவர் அப்துல் அஜீஸ் ஏற்றி வைத்தார். மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது, கிளைக் கழகச் செயலாளர் சின்னையன், ஜமாத் துணைச் செயலாளர் அப்துல் மஜீத், அப்துல் மாலிக் பிரதிநிதி, கிளைக் கழக பொருளாளர் அப்துல் ரஷீத், கிளை துணைச் செயலாளர் நூருல் அமீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் திமுக தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்