செந்தலைப்படினம் பொதுநல சங்கம் இளைஞர்களால் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் சேவை தற்போதுவரை பல சேவைகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உச்சம் தொடும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் பிற்பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பாகவும், தன்னார்வமைப்புகள், ஊர் இளைஞர்கள் சார்பாகவும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செந்தலையில் ECR சாலையில் செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் ஊர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 3 ஆம் தேதி கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அன்று முதல் நாள் என்பதால் செந்தலைப்பட்டிணம் பொது நலச்சங்கம் சார்பாக குளிர்ச்சியான முறையில் [ ஐஸ் மோர் ] கொடுத்து தொடங்கப்பட்டது. விழாவிற்கு ஊரட்சி மன்றத்தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேற்று ECR சாலையில் பயணிக்கும் மக்களுக்கும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் தர்பூசணி வழங்கப்பட்டது.
இன்று அதேபோல பேருந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கு ஐஸ் ரோஸ்மில்க் வழங்கப்பட்டது. பொதுநல சங்கத்தின் இச்செயலை பொது மக்கள் பாராட்டிவருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.