தமிழகம் முழுவதும் இன்று ஜுன் 17 தியாகத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று இந்தியா மற்றும் மலேசியா போன்ற ஒரு சில வெளிநாடுகளிலும் இன்று தியாகத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமிய இறைத்தூதர்களில் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுபவர் இப்ராஹிம் நபி இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக தியாகத்திருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
செந்தலையில் இளைஞர்கள், சகோதர, சகோதரிகள், குழந்தைகள் என அனைவரும் இன்று புத்தாடை அணிந்து ஏராளமானோர் அல் அக்சா ஜும்ஆ பள்ளிவாசலில் தியாகத்திருநாள் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடிவருகின்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.