செந்தலையில் 78- வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்



இந்தியாவின் 78- வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுதலை அடைந்து தனி நாடானதை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தினவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படிங்கிறது. இந்த நாள் நாடு முழுவதும் விடுமுறை நாளாகும். இந்த நாளில் அனைத்து இந்தியரும் சுதந்திரமடைந்ததை மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.


இந்த நாளில், டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இந்த விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், இந்த நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்படுவதுண்டு. மேலும் அவர்களுக்கு மரியாதையும் செலுத்தப்படும். ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். 


செந்தலைட்பட்டினத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 78  -வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஊர் ஜமாத்தார்கள், ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், 

ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்சியில் நாட்டின் தேசியக் கொடியினை ஊராட்சி மன்றத்தலைவர் ரகுமத்துல்லா அவர்கள் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினார்.














கருத்துரையிடுக

0 கருத்துகள்