பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களாலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். விவசாயத்தை போற்றும் அறுவடை திருநாளாம் பொங்கல் தினம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் உற்சாகம் பொங்க கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் பொங்கல் விழா வழக்கம் போலவே இந்த ஆண்டும் களை கட்டி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகளை அலங்கரித்து, தை மகளை வரவேற்று தமிழர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் சாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது இன்றுவரை பொங்கல் பண்டிகைதான். தமிழகத்தில் ஒரு போகம், இருபோகம், முப்போகம் என அறுவடை செய்யும் நிலப்பகுதிகள் உள்ளன, ஒரு மாவட்டத்திற்குள்ளேயே இந்த நிலப்பகுதிகள் மாறுபடும். அதனால் பொதுவாக தை மாத அறுவடையை அறுவடை திருநாளாக கொண்டாடியுள்ளனர்.
இந்த பொங்கல் நம்முடைய வாழ்விலும் புதிய விடியலை ஏற்படுத்தும் அதனால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என சொல்லப்படுகிறது. இந்த தைத் திருநாளான பொங்கல் பண்டிகை நம் அனைவருடைய வாழ்விலும் புதிய மாற்றத்தையும், ஏற்றத்தையும், அனைத்து விதமான வளங்களையும் பொங்கி பெருக செய்ய வேண்டும் என அனைவருடனும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துக்களுடன் செந்தலைநியூஸ்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.