திரும்பி பார்க்க…2021- ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..

ஜனவரி:
நாடு முழுவதும் கொரோனா அலை அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான சீரம் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும்,பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மத்திய அரசு அவசர அனுமதி வழங்கியது....

அதன்படி ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியினை முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் செலுத்திக் கொண்டனர்.

பிப்ரவரி:
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்ரவரி 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனால் பிப்ரவரி 25 ஆம் தேதி புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது....

தமிழ்நாடு,புதுச்சேரி,கேரளா,மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது..

மார்ச்:
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

ஏப்ரல்:
ஏப். 10 நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.68 லட்சத்தை நெருங்கியது. அதே போல், பாதிப்பு 1.32 கோடியை  தாண்டியது...

கடந்த 6 ஏப்ரல் ஆம் தேதி கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற்றது...

ஏப்ரல் 12  ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பணி ஓய்வு பெற்ற நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சுசில் சந்திரா 24-வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார்.

ஏப்ரல் 17 ஆம் தேதியன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்....

கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் ஏப்ரல் 20  ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

மே:
தமிழ்நாடு,புதுச்சேரி,கேரளா,மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசை தோற்கடித்து திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.

பாஜகவை தோற்கடித்த நிலையில்,மே 5 ஆம் தேதியன்று மூன்றாவது முறையாக மேற்கு வங்காள முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் கடந்த மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மே 7 ஆம் தேதியன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.


மே 9 ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ந.ரங்கசாமி பதவியேற்றார்.

அசாம் மாநில முதலமைச்சராக மே 10 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில்,மே 20 ஆம் தேதி கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்று கொண்டார்.


ஜூன்:
முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமனம்.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் 2-வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கவும், கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் 5 கிணறுகள் அமைக்கவும் ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது

அதிமுகவிலிருந்து புகழேந்தி நீக்கம் செய்யப்பட்டார்.

கிருமி நாசினி,முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு அறிவிப்பு..

மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜுன் 5-ல் ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூலை:
ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றி விரிவாக்கப்பட்டது. அதன்படி,43 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.  

மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் பாஜக தலைவருக்கு எல்.முருகன் அவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது.

ஜூலை 8 ஆம் தேதி அண்ணாமலை அவர்கள், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜூலை 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. 

ஜூலை 24 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆகஸ்ட்:
பி. வி. சிந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

லவ்லினா போர்கோஹெய்ன்,69 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி,ஜெர்மனி அணியை தோற்கடித்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் ரவி குமார் தாகியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தனது முதல் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா,87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

மேலும்,ஆடவர் 67 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.


ஆகஸ்ட் 6 ஆம் தேதி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் “மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது” எனப் பெயர் மாற்றப்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்  தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி  கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி,அந்நாளில் தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று டோக்கியோ பாரா-ஒலிம்பிக்கில் ஆடவர் T42 பிரிவில் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

செப்டம்பர்:
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள், அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பதவியேற்றார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகுவதாக அறிவித்தார்.

அக்டோபர்:
68 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 8 ஆம் தேதி ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்திற்கு ரூபாய் 18,000 கோடிக்கு விற்கப்பட்டது.

ஜனவரியில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின்படி,அக்டோபர் 21 ஆம் தேதியன்று வரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்தது.

அக்டோபர் 29 ஆம் தேதி ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா (Meta) என மாற்றப்பட்டது.


நவம்பர்:
வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில்,மத்திய அரசு முன்னதாக அறிவித்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக நவம்பர் 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார்.

ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சிக்கு பாமக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் படத்தால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை வெளிட்டார்.


டிசம்பர்:
டிச.1 ஆம் தேதியன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை,மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு,பின்னர் நிறைவேற்றப்பட்டது.மேலும்,மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிச. 9 தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்கும்பொருட்டு இனிஷியல் அதாவது முன்னெழுத்தை தமிழில் தான் எழுத வேண்டுமென உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டிச. 10 தமிழக அரசு விழாக்களில், இனி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கி, தமிழக அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிச.13-  70-வது மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில்,பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் வென்றார்.

டிச. 15 தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டிச. 17 நெல்லை பள்ளியில் கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு டிச.18 ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.18 அன்று தொடங்கி வைத்தார்..

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான  தேர்தல் சட்ட திருத்த மசோதா டிச.21 ஆம் தேதி மக்களவையிலும் ,டிச.22 ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. விரைவில் தேர்தல் சட்ட திருத்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.

டிச. 23 Pfizer நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க அனுமதி அளித்தது..

டிச.23 தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னெடுத்தது..

டிச.24 அன்று இரவு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்